search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டார்க் மோட்"

    வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் டார்க் மோட் அம்சம் சோதனை செய்யப்படுகிறது. விரைவில் இதற்கான அப்டேட் வழங்கப்படலாம். #WhatsApp



    வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா ஆப் 2.19.82 வெளியிடப்பட்டுள்ளது. புதிய அப்டேட் செயலியில் டார்க் மோட் வசதியை வழங்கியிருக்கிறது. செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டார்க் மோட் அம்சம் ஒருவழியாக பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்படுகிறது.

    அந்த வகையில் இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படலாம். இந்த அம்சம் முதற்கட்டமாக பீட்டா பதிப்பில் மட்டும் சோதனை செய்யப்படுகிறது. சமீபத்திய பீட்டா பதிப்புகளில் வெளியான விவரங்களில் மேலும் புதிய அம்சங்கள் வாட்ஸ்அப் செயலியில் சேர்க்கப்பட இருப்பதை வெளிப்படுத்தின. 

    வாட்ஸ்அப் செயலியில் அனைவருக்கும் டார்க் மோட் வசதி எப்போது வழங்கப்படும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.82 பதிப்பில் சேர்க்கப்பட்டிருக்கும் டார்க் மோட் வசதியின் ஸ்கிரீன்ஷாட்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. 



    ஸ்கிரீன்ஷாட்களின் படி புதிய மோட் நோட்டிஃபிகேஷன் செட்டிங்ஸ், டேட்டா, ஸ்டோரேஜ் செட்டிங்ஸ், சாட் செட்டிங்ஸ் மற்றும் அக்கவுண்ட் செட்டிங் உள்ளிட்டவற்றில் இயங்குகிறது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் டார்க் மோட் வசதி OLED பேனல்களுக்கு ஏற்றதாக இருக்காது என்றும் இது டார்க் கிரே நிறம் சார்ந்து உருவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த அம்சம் தற்சமயம் தானாக எனேபிள் செய்யப்படவில்லை. இதனால் செயலியை புதிய 2.19.82 வெர்ஷனுக்கு அப்டேட் செய்திருந்தாலும் இந்த அம்சத்தினை பார்க்க முடியாது. வாட்ஸ்அப் செயலியில் டார்க் மோட் வசதி வழங்குவதற்கான பணிகள் கடந்த ஆண்டு முதல் மேற்கொள்ளப்படுகிறது.

    சமீபத்தில் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு 2.19.80 பதிப்பில் ஃபார்வேர்டிங் இன்ஃபோ (Forwarding Info) மற்றும் ஃபிரீக்வன்ட்லி ஃபார்வேர்டெட் (Frequently Forwarded) என இரு அம்சங்கள் சேர்க்கப்பட்டன. பார்வேர்டிங் இன்ஃபோ மூலம் நீங்கள் உங்களது நண்பர்களுக்கு அனுப்பிய குறுந்தகவல் எத்தனை பேருக்கு ஃபார்வேர்டு செய்யப்பட்டிருக்கிறது என்பதை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதனை மெசேஞ் இன்ஃபோ பகுதியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

    புகைப்படம் நன்றி: WABetaInfo
    கூகுள் க்ரோம் சேவையில் டார்க் மோட் ஆப்ஷனை ஆக்டிவேட் செய்வதற்கான வசதி க்ரோம் கனாரி செயலியின் மூலம் வழங்கப்படுகிறது. #GoogleChrome



    கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு மற்றும் வலைதளங்களில் டார்க் மோட் வசதியை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு இருப்பது அனைவரும் அறிந்ததே. 

    இந்நிலையில் டார்க் மோட் வசதியை செயல்படுத்த பயனர்கள் க்ரோம் கனாரியை பயன்படுத்தலாம். சில வலைப்பக்கங்களில் டார்க் மோட் வித்தியாசமாக பிரதிபலிக்கிறது. இந்த வசதி மொபைல் மட்டுமின்றி வலைதளத்திற்கும் கிடைக்கிறது. டார்க் மோட் வசதியினை ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளத்திலும் எதிர்பார்க்கலாம்.



    சாம்சங் பிரவுசர் பயன்படுத்தியதை போன்றே வழிமுறையை க்ரோம் சேவையின் டார்க் மோட் வசதியை செயல்படுத்த கூகுள் பின்பற்றலாம் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு துவக்கம் முதல் டார்க் மோட் வசதியை வழங்குவதில் கூகுள் ஆர்வம் செலுத்தி வருகிறது. 

    டார்க் மோட் வசதியின் மூலம் இரவு நேர பயன்பாடுகளை சிறப்பானதாக மாற்ற முடியும். முன்னதாக இந்த அம்சம் ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளத்தில் சீராக வழங்கப்படலாம் என கூறப்பட்டது. எனினும், இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் வலைதளங்களில் அறிமுகமாகி இருக்கிறது.

    எனினும், டார்க் மோட் அனைத்து வலைதளங்களுக்கும் சீராக இருக்குமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. இவை பயன்பாட்டு காரணங்களுக்காக வழங்கப்பட்டிருப்பதால், இதனால் செயல்பாடுகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. புதிய டார்க் மோட் க்ரோம் கனாரி புதிய வெர்ஷனில் பயன்படுத்த முடியும்.
    ×